|
26 ஜனவரி 2012 மாலை 08:12
|
|
மூன்று வண்ணத்தில் ஒரு சாண்ட்விச் ! குடியரசு தின ஸ்பெஷல் !
தேவையான பொருட்கள்
மூன்று ஸ்லைஸ் பிரட் துண்டுகள்
மல்லி புதினா இலைகள் – தலா ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் – 1
எண்ணெய் – சிறிது
உப்பு – தேவைக்கு சிறிது
காரட் துருவியது – 1
தக்காளி கெட்சப் – சிறிதளவு
பெப்பர் தூள், உப்பு – சிறிது
![]()
செய்முறை விளக்கம்
முதலில் இலைகளை ஆய்ந்து கழுவி, சிறிது எண்ணையில் பச்சை மிளகாயுடன் வதக்கவும். உப்பு சேர்க்கவும்.
பிறகு நல்ல மைபோல் சட்னியாக
அரைத்து வைத்துக்கொள்ளவும்.
துருவிய காரட், தக்காளி கெட்சப், பெப்பர் தூள், உப்பு சேர்த்து பிரட்டி
வைத்துக்கொள்ளவும்.
பிரட்டின் ஓரங்களை நீக்கி விட்டு, முதலில் ஒரு ஸ்லைசை தட்டில் வைக்கவும், அதன் மேல் பச்சை சட்னியை பரப்பினார் போல தடவவும்.
பிறகு, இன்னொரு பிரட் ஸ்லைஸ் வைத்து
மூடவும், அதன் மேல் காரட் கலவையை பரப்பவும். மூன்றாவது பிரட் ஸ்லைஸ் வைத்து மூடவும்.
விருப்பமான வடிவத்தில் வெட்டி பரிமாறவும். விரைவாக செய்யக்கூடிய சுலபமான சத்துள்ள உணவு. காலை மாலை நேர சிற்றுண்டியாகவும், குழந்தைகளின் பள்ளிக்கூட லஞ்சுக்கும் கொடுத்தனுப்பலாம்.
வழங்கியவர்: உம்மு ரஹீஃபா
|
Sunday, 5 February 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment