வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்
12th March, 2011
சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
உடல் எடை மிகுந்தவர்களுக்கே மூட்டுவலி, மூட்டு வீக்கம் போன்ற தொல்லைகள்
வருகின்றன. இவை வாத நோய்க்கான அறிகுறி என்பதை உணர்ந்து உணவுத்திட்டத்தை
மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும்.
மூட்டு வீக்கத்திற்கு மேலும் மேலும் மருந்துகள், புது வைத்தியம் என்று
பார்ப்பதை விட சரியான சத்துணவு மூலம் மூட்டு வீக்கம், மூட்டு வலி முதலிய
துன்பங்களை எளிதில் வென்று இயல்பாக வாழலாம்.
சிவப்பு இறைச்சி (Red Meat) கொழுப்பு நீக்காத பால் சம்பந்தப்பட்ட
தயாரிப்புகள், எண்ணெயில் வேக வைத்த மாவுப் பண்டங்கள், மிட்டாய், கேக் வகைகள்
முதலியவற்றிற்கு எடை அதிகரிக்கும் போதே முழுத் தடைபோட வேண்டும். அதாவது, இவற்றை
எல்லாம் ருசிக்காகக் கூடத் தொடக்கூடாது.
இந்த உணவுப் பொருட்களின் உள்ள கொழுப்புச் சத்தால் எலும்பு இணைப்புகளில்
அழற்சி ஏற்படுகிறது. மூட்டுவலி உண்டாகி வலிக்கிறது. சிலருக்கு மூட்டு வீக்கம்
ஏற்படுகிறது. இந்த உணவு வகைகள் அதிகமானால் மூட்டு வீக்கமும் அதிகமாகும்.
ஐரோப்பிய நாடுகளில் வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒமேகா-3 மீன் எண்ணெயைச்
சாப்பிட்டுக் குணமடைகிறார்கள். இந்த எண்ணெய் மூட்டு வலியை உண்டு பண்ணும் இரசாயனப்
பொருட்களை உடலில் இருந்து குறைத்துக் கட்டுப்படுத்தி வைக்கிறது.
வாத சம்பந்தமான நோயாளிகள் இறைச்சி வகைகளுக்குப் பதிலாக தானியங்கள்,
பழங்கள், காய்கறிகள் முதலியவற்றை நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குருத்தெலும்பில் உள்ள இணைப்புகள் பிறழ்வது மூட்டு வீக்கத்திற்கு மிக
முக்கியமான காரணம். இந்த எலும்பு இணைப்புகள் கெட்டுப் போகாமல் பழுதுபட்டு விடாமல்
இருக்க தினமும் வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு, தக்காளி முதலியவற்றைச் சேர்த்து
வரவேண்டும். வைட்டமின் சி உணவு வகைகள் குறைவாக இடம் பெற்றால், அந்த நாட்களில்
மட்டும் வைட்டமின் சி மாத்திரையைத் தனியாகச் சாப்பிடலாம்.
எலும்புகள் தேய்ந்து மெல்லியதாக மாறினால் அதுவும் உடல் நலனுக்கு நல்லது
அல்ல. பெண்களில் பலருக்கு எலும்பு அழற்சி ஏற்படுவது இதனால்தான். எனவே, எலும்புகள்
சரியான வளர்ச்சியுடன் ஆரோக்கியமாகத் திகழ ஈரல், முட்டை, பால் முதலியவற்றை நன்கு
சேர்த்து வரவேண்டும். இவற்றில் உள்ள ‘டி’ வைட்டமின் எலும்புகள் தேய்ந்து போகாதபடி
பாதுகாத்துக் கொள்ளும்.
இஞ்சியையும், வெள்ளைப் பூண்டையும் தினமும் உணவில் சேர்ப்பதும்,
சுக்குக்காபி குடிப்பதும் வாத சம்பந்தமான மூட்டுவீக்கம், வலி முதலியவற்றை நன்கு
குறைத்துவிடும்!
மூட்டு வீக்க நோயாளிகள் சாதம், சப்பாத்தி, தயிர், மீன், சிட்ரஸ் பழங்கள்
முதலியவற்றை விடாது தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.
மேற்கண்ட உணவு வகைகளுடன் சோயா பீன்ஸ், மாம்பழம், காரட், டர்னிக் கீரை, கைக்குத்தல்
அரிசி, ஓட்ஸ், காலிஃப்ளவர், காளான், ராகி, பேரீச்சம்பழம், நண்டு, சிப்பி நண்டு,
வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் அவ்வப்போது சேர்த்து வந்தால் இவற்றில் உள்ள
கால்சியம், செம்பு, வைட்டமின் ஏ, டி மற்றும் பாந்தோனிக் அமிலம் போன்றவை
எலும்புகளில் பிறழ்வு ஏற்படாமல் பாதுகாப்புடன் மூட்டுவலி உபாதையை முற்றிலும்
தணிக்கும்.
எடையை அதிகரிக்க விடாமல் சரியான சத்துணவையும் பின்பற்றினால் மூட்டுவலி,
மூட்டு வீக்கம் முதலியவற்றிலிருந்து முழு விடுதலை உண்டு.
நன்றி: – கே.எஸ்.சுப்ரமணி - தமிழ்வாணன்.காம்
t' � g n Px y m;
margin-bottom:12.0pt;margin-left:0cm;text-align:center;mso-line-height-alt:
8.75pt;background:white'>கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்!
உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். கொலஸ்டிரால் என்பது
ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும்
காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர்
மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது
ஓட்ஸ், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள் உடலில் உள்ள அதிகப்படியான
கொலஸ்ட்ராலை குறைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பாதாம் போன்ற பருப்பு
வகைகள் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பதால், பெரும்பாலும் இத்தகைய உணவு வகைகளை
பலரும் தவிர்க்கின்றனர். அதற்கு மாறாக இவற்றை சாப்பிட்டால் உடலில் உள்ள
அதிகப்படியான கொலஸ்ட்ரால் கரையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கனடா,
டொரான்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜோன் செபேட் தலைமையில் இதுகுறித்து ஆய்வு
மேற்கொண்டனர்.
ஆய்வு முடிவு குறித்து ஜோன் செபேட் கூறியதாவது: பொதுவாக உடல் எடையை குறைக்க
பாதாம், பிஸ்தா ஆகியவற்றை தவிர்க்குமாறு கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு
நார்ச்சத்து அவசியம். இவற்றையும் தேவைக்கேற்ப உணவில் சேர்ப்பதில்லை. முறையான
அறிவுரையின்றி மேற்கொள்ளப்படும் உடல் பருமன் குறைப்பு நடவடிக்கைகள் பயனற்றதாகவே
இருக்கும். மாறாக இதனால் உடல் பருமன் அதிகமாகும் ஆபத்தும் உண்டு. சமீபத்திய எங்கள்
ஆய்வில் ஓட்ஸ், நட்ஸ் அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு
கட்டுப்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.
அதிகளவு நார்ச்சத்து உள்ள உணவுகளும் உடலுக்கு அவசியம். சோயா உணவு வகைகளான
சோயா பால், டோஃபு ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். பச்சை பட்டாணி,
லென்டில்ஸ் உள்ளிட்ட பயிறு வகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். ஆய்வுக்காக
எடுத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு இத்தகைய உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து கண்காணித்ததில்
அவர்களது உடலில் கொலஸ்ட்ரால் அளவு 13 சதவீதம் குறைந்திருந்தது.
ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
கொழுப்பை எளிதாக கரைக்கும். தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட 11 சதவீதம்
பேர் இதய நோயில் இருந்து மீண்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளனர். இவர்கள் 10
ஆண்டுகளுக்கு மேலாக இதய நோய் பாதிப்பால் அவதிப்பட்டவர்கள். உடற்பயிற்சியும் உணவுக்
கட்டுப்பாடும் மட்டுமே உடல் பருமனுக்கு தீர்வாகாது. சரியான உணவு முறையை
தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியம். இவ்வாறு ஜோன் செபேட் கூறியுள்ளார்.
நன்றி: தினகரன்
No comments:
Post a Comment