மொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை!
7th April, 2013
உலகம் முழுவதும்
மொபைல் போன்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது. மொபைல் போன்களில் நாளுக்கு
நாள் புதிய வசதிகளை அறிமுக படுத்துவதே மொபைல் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை
அதிகரிக்க காரணமாக உள்ளது. விலைகுறைந்த போன்கள் முதல் விலை உயர்ந்த போன்கள் வரை
அனைத்து மொபைல்களுக்கும் தேவையான ஒரு அடிப்படை விஷயம் சார்ஜ் போடுவது. இப்பொழுது
அனைவரும் மின்சாரம் மூலம் தான் போடுகிறோம். மின்சாரம் இல்லை என்றால் நம் மொபைலை
சார்ஜ் போடாமல் உபயோகிக்க முடியாத நிலை உள்ளது.
ஏற்க்கனவே மின்சாரத்தை
தவிர்த்து ரூபாய் நோட்டு, இலைகள், அரிசி மூலம் போடுவது போன்ற பல செய்திகள் நாம்
படித்திருந்தாலும் இவைகள் எல்லாம் தற்காலிகமே இதற்காக என்பதால் இந்த முயற்சிகள்
தோல்வியில் தான் முடிந்துள்ளன. ஆனால் இப்பொழுது ஜப்பானின் TES New Energy என்ற
நிறுவனத்தால் Pan Energy என்ற ஒரு புதிய USB Charger கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கருவி மூலம்
மொபைலுக்கு சார்ஜ் போட மின்சாரம் தேவையில்லை வெப்பம் இருந்தாலே போதும். சூடான
பொருட்கள் மீது இந்த கருவியை வைத்து மொபைலை சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த கருவி
வெப்ப ஆற்றலை நேரடியாக மின்ஆற்றலாக மாற்றி மொபைல்களுக்கு சார்ஜ் செய்கிறது.
இந்த கருவி மூலம் செல்போன்கள், MP3 பிளேயர்ஸ், IPOD மற்றும் USB இணைப்பு
இருக்கும் எல்லா கருவிகளுக்கும் சார்ஜ் போட முடியும் என்பது இதன் கூடுதல்
வசதியாகும். இந்த கருவி ஏற்கனவே ஜப்பானில் விலைக்கு வந்தாச்சு. ஆனால் இதன் விலை
$299 (Rs. 13,750) மிக அதிகமாக இருப்பதால் இந்த கருவியின் விற்பனை எதிர்பார்த்த
அளவு இல்லை. இந்த நிறுவனம் விலையில் மாற்றம் செய்தால் உலகம் முழுவதும்
வீணாக்கப்படும் மின்சாரத்தை சேமிக்கலாம்.
மின்சாரம் இல்லாமல்
சார்ஜ் போட Pan Energy என்ற கருவி மட்டும் தான் உள்ளதா என்றால் இல்லை. Yogen என்ற
கருவியும் உள்ளது. இந்த கருவி மூலமும் மின்சாரம் இல்லாமல் 5 அல்லது 10 நிமிடத்தில்
நம் பொங்கலுக்கு சார்ஜ் போட்டு விடலாம் இதன் விலை $45 (Rs. 2000)
இவைகளை மீறி
கென்யாவில் மொபைல் போன்களுக்கு சார்ஜ் போட ஒரு வித்தியாசமான முறையை
கையாளுகின்றனர். இவர்கள் தங்கள் போன்களுக்கு மிதிவண்டிகளை உபயோகித்து எப்படி
சார்ஜ் போடுகின்றனர் என்று கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.
ஏற்க்கனவே மின்சார
தட்டுப்பாட்டால் உள்ள நம் நாட்டில் இந்த மொபைல் போன்களுக்கு சார்ஜ் போடுவதாலும்
குறிப்பிட்ட அளவு மின்சாரம் செலவாகிறது. இந்தியா முழுவதும் ஒரு நாள் சார்ஜ்
போடுவதால் வீணாகும் மின்சாரத்தை வைத்து ஒரு பெரிய தொழிற்சாலையை 1 மாதம் இயக்க
முடியும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
இந்த முறைகளை அரசு
பரிசோதித்து மொபைலுக்கு சார்ஜ் போட ஏதாவது ஒரு மாற்று வழியை உருவாக்கினால் மொபைல்
போன்கள் மூலம் வீணாகும் மின்சாரத்தை சேமித்து பல பயனுள்ள திட்டத்திற்கு உபயோகித்து
கொள்ளலாம்.
நன்றி: வந்தேமாதரம்
family:� ~ _ a �
�ϻ so-fareast-font-family:"Times New Roman";
color:black;mso-fareast-language:EN-GB'>
உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது
நல்லது. அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை,
நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு
காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடமிட நல்ல பலன் கிடைக்கும்
சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை
சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.
பல்வலி போக்கும்
பல்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில
நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப்
பல்துலக்கி வரவும்.
விஷமுறிவாகும் மிளகு
மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு
கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்து கசாயமிட்டு குடித்து வர சகல
விஷக்கடிகளும் முறியும். மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில்
கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால்
ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.
பூச்சிவெட்டு குணமடையும்
சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப்
புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து
மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.
மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு [ALOPECIA]
உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.
மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன்
மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும்.
“பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி.
நன்றி:அபூவஸ்மீ
���7 � � � �
�ϻ ��ந்தது. தாய் தந்தையரை
தெய்வம் போல மதித்து பாதுகாத்தார்கள். தற்காலத்தில் ஒரு மாணவன் பெறும் அதிக
மதிப்பெண்கள் மட்டுமே சிறப்பான வாழ்க்கையினை நிர்ணயிக்கும் என்று பெற்றோர்களும்
கல்வி நிறுவனங்களும் இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு போதித்ததன் விளைவாக ஆடம்பர
வாழ்க்கை ஏராளமான பணம் இவை மட்டுமே வாழ்வின் ஆதாரம் என்ற கருத்து அவர்களின் மனதில்
பதியத் தொடங்கி விட்டது. இதன் விளைவாக புதிய புதிய வாழ்க்கைச் சிக்கல்களும்
முதியோர் இல்லங்களும் பெருகத் தொடங்கிவிட்டன.
பெரிய படிப்பு, அதிக
சம்பளம், ஆடம்பர மான வாழ்க்கை இதுவே அனைவரும் விரும்பும் மந்திரச் சொற்களாக
அமைந்துவிட்டன. இன்றைய சூழலில் இது தவறில்லைதான். ஆனால் கூடவே அன்பு, கருணை,
மகிழ்ச்சி இவற்றை நம் வாழ்க்கையின் முக்கியமான அங்கங்களாக ஏற்றுக்கொண்டு வாழப்
பழகு வோம். எவனொருவன் இவை அனைத்தையும் ஒரு சேரப் பெற்று வாழ்கிறானோ அவனே
வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு பெற்ற சிறந்த மனிதனாகப் போற்றி மதிக்கப்படுவான்.
நன்றி: ஆர். வி. பதி –
தன்னம்பிக்கை
No comments:
Post a Comment