Sunday, 14 April 2013

வீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று


வீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று
14th April, 2013
பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ், மீதி ஃபிரக்டோஸ் (பழச்சர்க்கரை). விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. கனியக் கனிய விட்டமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் விட்டமின் சி யும் மிக அதிகமாக இருக்கும். பப்பாளியில் சிறிதளவு விட்டமின் பி1, விட்டமின் பி2 மற்றும் நியாசின் என்பனவும் உள்ளன. பச்சைக் காயிலுள்ள பாலில், செரிமானத்திற்கு உதவும் நொதியப் பொருட்கள் (என்சைம்) உள்ளன. இதற்கு பப்பாயின் என்று பெயர்.
இது புரோட்டீனை செரிக்க வைக்க மிகவும் உதவும். நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும். நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து. பித்தத்தைப் போக்கும்.
உடலுக்குத் தென்பூட்டும். இதயத்திற்கு நல்லது. மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும். கல்லீரலுக்கும் ஏற்றது. கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும். கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும் .முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும். இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும் பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.
பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது. இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது. இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.
‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும். பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.
நன்றி: சிறுப்பிட்டி
��ல � � � � �ϻ ு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடமிட நல்ல பலன் கிடைக்கும்
சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.
பல்வலி போக்கும்
பல்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.
விஷமுறிவாகும் மிளகு
மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்து கசாயமிட்டு குடித்து வர சகல விஷக்கடிகளும் முறியும். மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.
பூச்சிவெட்டு குணமடையும்
சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.
மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு [ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.
மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும்.
“பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி.
நன்றி:அபூவஸ்மீ
���7 � � � � �ϻ ��ந்தது. தாய் தந்தையரை தெய்வம் போல மதித்து பாதுகாத்தார்கள். தற்காலத்தில் ஒரு மாணவன் பெறும் அதிக மதிப்பெண்கள் மட்டுமே சிறப்பான வாழ்க்கையினை நிர்ணயிக்கும் என்று பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு போதித்ததன் விளைவாக ஆடம்பர வாழ்க்கை ஏராளமான பணம் இவை மட்டுமே வாழ்வின் ஆதாரம் என்ற கருத்து அவர்களின் மனதில் பதியத் தொடங்கி விட்டது. இதன் விளைவாக புதிய புதிய வாழ்க்கைச் சிக்கல்களும் முதியோர் இல்லங்களும் பெருகத் தொடங்கிவிட்டன.
பெரிய படிப்பு, அதிக சம்பளம், ஆடம்பர மான வாழ்க்கை இதுவே அனைவரும் விரும்பும் மந்திரச் சொற்களாக அமைந்துவிட்டன. இன்றைய சூழலில் இது தவறில்லைதான். ஆனால் கூடவே அன்பு, கருணை, மகிழ்ச்சி இவற்றை நம் வாழ்க்கையின் முக்கியமான அங்கங்களாக ஏற்றுக்கொண்டு வாழப் பழகு வோம். எவனொருவன் இவை அனைத்தையும் ஒரு சேரப் பெற்று வாழ்கிறானோ அவனே வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு பெற்ற சிறந்த மனிதனாகப் போற்றி மதிக்கப்படுவான்.
நன்றி: ஆர். வி. பதி – தன்னம்பிக்கை

No comments:

Post a Comment