Virtues of Surah Al Baqara
Ad-Darimi also recorded that Ash-Sha`bi said that Abdullah
bin
Mas`ud said,
"Whoever recites ten Ayat from Surah Al-Baqarah in a
night, then Shaytan will not enter his house that night.
These ten Ayat are;
• four from the beginning,
• Ayat Al-Kursi (255),
• the following two Ayat (256-257) and
• the last three Ayat.''
In another narration, Ibn Mas`ud said,
"Then Shaytan will not come near him or his family, nor
will he be touched by anything that he dislikes. Also, if
these Ayat were to be recited over a senile person, they
would wake him up.''
Further, Sahl bin Sa`d said that the Messenger of Allah
said,
Everything has a hump (or, high peek), and Al-Baqarah
is the high peek of the Qur'an. Whoever recites Al-
Baqarah at night in his house, then Shaytan will not
enter that house for three nights. Whoever recites it
during a day in his house, then Shaytan will not enter
that house for three days.
This Hadith was collected by Abu Al-Qasim At-Tabarani,
Abu Hatim Ibn Hibban in his Sahih and Ibn Marduwyah.
2:1 அலிஃப். லாம். மீம்.
2:2 இது அல்லாஹ்வின் வேதமாகும்;
இதில் யாதொரு சந்தேகமும்
இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும்.
2:3 அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச்
செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள்.
2:4 மேலும், உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் (குர்ஆன்) மீதும், உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்கள். இறுதித்
தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள்.
2:5 இத்தகையோரே தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள்
2:255 அல்லாஹ் நித்திய ஜீவன்,
(பேரண்டம் அனைத்தையும்)
நன்கு நிர்வகிப்பவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தூங்குவதுமில்லை; மேலும் சிற்றுறக்கமும் அவனைப்
பிடிப்பதில்லை; வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுடையவையே! அவனுடைய அனுமதியின்றி அவனுடைய திருமுன் எவர்தான்
பரிந்து பேச முடியும்! அவர்களுக்கு முன்னாலிருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் (மறைவாக)
இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடுவதைத் தவிர,
அவன் ஞானத்திலிருந்து
வேறெதையும் எவரும் புரிந்து கொள்ள முடியாது. அவனுடைய அரசாட்சி வானங்கள், பூமி அனைத்திலும் பரந்து நிற்கின்றது.
அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. மேலும் அவன் மிக உயர்ந்தவனும்,
மகத்துவம் மிக்கவனுமாய்
இருக்கின்றான்.
2:256 தீனில் (இறைநெறியை மேற்கொள்வதில்) யாதொரு கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லை. தவறான வழியிலிருந்து
நேரான வழி தெளிவாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. இனி எவர் தாஃகூத்தை* நிராகரித்து அல்லாஹ்வின்
மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் திட்டமாக,
மிகப் பலமான பிடிமானத்தைப்
பற்றிக் கொண்டவராவார். அது என்றுமே அறுந்துவிடாது. (அவர் தன்னுடைய ஆதரவாளனாகத் தேர்ந்தெடுத்துக்
கொண்ட) அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும் நன்கறிவோனுமாய் இருக்கின்றான்.
2:257 இறைநம்பிக்கை கொண்டோருக்குப் பாதுகாப்பளித்து உதவுபவன் அல்லாஹ்தான்! அவன், அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். மேலும்
இறைநிராகரிப்பை மேற்கொண்டவர்களுக்கு உதவுவோர்,
தாஃகூத்களேயாவர். அவர்கள்
இவர்களை ஒளியிலிருந்து வெளியேற்றி இருள்களின் பக்கம் கொண்டு செல்கின்றனர். அத்தகையவர்கள்
நரகவாசி களேயாவர்; அவர்கள் என்றென்றும் நரக நெருப்பில் வீழ்ந்து கிடப்பார்கள்!
2:284 வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். உங்கள் உள்ளங்களில்
உள்ளவற்றை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது மறைத்து வைத்தாலும் எந்நிலையிலும் அல்லாஹ்
உங்களிடம் அவை பற்றிக் கணக்குக் கேட்பான். பின்னர் தான் நாடுபவர்களை அவன் மன்னிப்பான்; தான் நாடுபவர்களைத் தண்டிப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவனாய்
இருக்கின்றான்.
2:285 இந்தத் தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்.
அவரை ஏற்றுக் கொண்டவர்களும் அந்த வழிகாட்டுதலின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள்
அனைவரும் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் மற்றும் அவனுடைய
தூதர்களையும் நம்புகின்றனர். மேலும் “அல்லாஹ்வுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை பாராட்டுவதில்லை” என்றும், “எங்கள் இறைவனே! நாங்கள் செவியேற்றோம்; அடிபணிந்தோம். எங்கள் இறைவனே! நாங்கள் உன்னுடைய மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே
(நாங்கள்) திரும்பி வர வேண்டியிருக்கிறது”
என்றும் கூறுகின்றனர்.
2:286
அல்லாஹ்
எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை.
அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே! (நம்பிக்கை கொண்டவர்களே!
நீங்கள் இவ்வாறு இறைஞ்சுங்கள்:)
“எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து போயிருப்பினும்,
பிழை செய்திருப்பினும்
நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே! எங்கள் இறைவனே! மேலும், எங்களுக்கு முன் சென்றோர் மீது நீ பாரத்தை சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தைச்
சுமத்தி விடாதே! எங்கள் இறைவனே! மேலும் நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி
விடாதே! எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எங்கள் மீது
கருணை பொழிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலனாவாய்! (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு
எதிராக வெற்றி கொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக!”
No comments:
Post a Comment